Published : 29 Apr 2015 06:39 PM
Last Updated : 29 Apr 2015 06:39 PM
செய்தி:>விழாக்களில் யானைகளை பயன்படுத்த வேண்டாம்: கேரள முதல்வருக்கு ஹாலிவுட் நடிகை பமீலா வேண்டுகோள்
தி இந்து ஆன்லைன் வாசகர் சிங்கர் கருத்து:
பமீலா அக்கா! நீங்க ரொம்ப நல்லவங்க! ஆனால் இந்தியாவ ஏதாவது கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டே இருக்கணும் என்கிற கூட்டத்தோட சேர்ந்து கொண்டு பேசற மாதிரி தெரியுது !இங்க இந்துக்கள் யானை , குதிரை, பசு, எருது, நாய், பாம்பு, காக்கை, மயில் இன்னும் நிறைய விலங்குகளை தெய்வமாக வழிபடுகிறோம்!
அதனால் அவைகளை அன்புடன் வளர்த்துவருகிறோம்! யாரும் விலங்குகளை கூண்டில் அடைத்து சித்தரவதை செய்வதில்லை! சாமி புறப்பாடு, தேர் திருவிழா ஊர்வலங்களில் யானை, குதிரை இவைகளை ஊர்வலத்தின் முன்பாக அழைத்து செல்லுவது வழக்கம்! அதுக்காக அவைகளை கூண்டுகளில் அடைத்து கொடுமை செய்வதில்லை!
நல்ல பராமரிப்புடன் வளர்த்து வருகிறோம்! வெயிலில் யானைக்கு கால் சுடத்தான் செய்யும்! என்ன செய்வது இன்னும் மிதியடி கண்டுபிடிக்கவில்லையே! இங்க மனிதர்களில் சிலர் மிதியடியில்லாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறோம்! கேரளாவில் யானைகள் அதிகம். அதனால் ஊர்வலத்தில் நிறைய யானைகள் கலந்துகொள்கிறது! அது எங்களது சமூக பழக்க வழக்கங்கள், அதில் நீங்கள் தலையிடாதீர்கள்!