Published : 01 Apr 2015 08:10 AM
Last Updated : 01 Apr 2015 08:10 AM

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 83 ஆயிரம் இடங்கள் காலி: அமைச்சர் பழனியப்பன் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 83 ஆயிரத்து 415 இடங்கள் காலியாக உள்ளன என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பத்மனாப புரம் உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன் (திமுக) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பழனியப்பன் கூறியதா வது: தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 41, அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் 34, சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் 427 என மொத்தம் 502 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள மொத்த இடங்கள் 2 லட்சத்து 3 ஆயிரத்து 200. ஆனால், நடப்பாண்டில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 785 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அரசு பாலிடெக்னிக், ஒரு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் உட்பட 23 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்து 385 இடங்கள் உள்ள நிலையில் 5 ஆயிரத்து 227 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் திருவட்டாறு அருகே ஆனையடியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக் கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x