

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக மீனவர்கள் இலங்கை எல்லையில் மீன் பிடிக்க அனுமதி வேண்டு மென்கிற கோரிக்கையை பேச்சுவார்த்தையின்போது பரிசீலிப்பதாக கூறினர். இப்போது இலங்கை எல்லைக்குள் வந் தால் கைது செய்வோம், படகு களைப் பறிமுதல் செய்வோம் என்று இலங்கை அதிபர் எச்சரித்துள்ளார். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண் டும்.” இவ்வாறு சரத்குமார் கூறி உள்ளார்.