Published : 27 Apr 2015 08:27 AM
Last Updated : 27 Apr 2015 08:27 AM

எழுத்தாளர் குப்புசாமிக்கு ஜெயகாந்தன் விருது

கடலூரில் ஜெயகாந்தன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் எழுத்தாளர் குப்புசாமிக்கு விருது வழங்கப்பட்டது.

கடலூரில் சிகே கல்விக்குழுமம், புனிதவளனார் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், சர்வதேச தாவர உணவாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஜெயகாந்தன் விருது வழங்கும் விழாவை நடத்தின. நிகழ்ச்சிக்கு வ.உ.சி பேரன் முத்து குமாரசாமி தலைமை வகித்தார். புதுச்சேரி தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து முன்னிலை வகித்தார்.

கடலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் குழந்தைவேலனார் வரவேற்று பேசினார். ஜெய காந்தன் விருதை பெற்ற எழுத் தாளர் குப்புசாமிக்கு ரூ.10 ஆயிரம் பணமுடிப்பு மற்றும் சான்றி தழ் வழங்கப்பட்டது. விருது பெற்ற எழுத்தாளர் குப்புசாமி பேசும்போது, ஜெயகாந்தன் எளி மையாக பழகக்கூடியவர். பெண் களை உயர்வாக மதிக்கக் கூடியவர். சமுதாய நிகழ்வு களை கதைகளில் யதார்த்தமான பாத்திரங்கள் மூலம் வெளிபடுத்தக் கூடியவர் என்றார்.

எழுத்தாளர்கள் பிரபஞ்சன், சேதுபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமிழ்ச் சங்க மாவட்ட துணை தலைவர்கள் சுகிர்தராசு, பழ ஆறுமுகம், பொருளாளர் கந்த சாமி, செய்தி தொடர்பாளர் ராஜ மச்சேந்திரசோழன் மற்றும் பேராசிரியர்கள், கவிஞர்கள், எழுத் தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருது பெற்ற எழுத்தாளர் குப்புசாமி, ஜெயகாந்தனுடன் 30 ஆண்டுகள் நெருங்கி பழகியவர் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x