Published : 16 Apr 2015 08:43 AM
Last Updated : 16 Apr 2015 08:43 AM

சென்னையில் 24-ம் தேதி குண்டு வெடிக்கும்: டிஜிபி அலுவலகத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல் கடிதம்

தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப் பினர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், ‘சென்னையில் 24-ம் தேதி குண்டு வெடிக்கும். ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் 10 பேரையாவது சுட்டுக் கொல்வோம்’ என எச்சரித்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று காலை கூரியர் தபாலில் ஒரு கடிதம் வந்தது. அதை பிரித்துப் பார்த்த அலுவலர் கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்தக் கடிதத்தில், ‘சென்னை யில் தீவிரமாக செயல்படும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் 50 பேரை அடையாளம் கண்டுபிடித்து வைத் திருக்கிறோம். அவர்களில் 10 பேரையாவது விரைவில் சுட்டுக் கொல்வோம். கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்ப வத்தைப் போல சென்னையிலும் ஏப்ரல் 24-ம் தேதி குண்டு வெடிக்கும்’ என்று எழுதப்பட்டிருந்தது. கடிதத்தின் கடைசியில் ஐஎஸ்ஐஎஸ் என எழுதப்பட்டிருந்தது.

கடிதத்துடன் ஒரு துண்டுச் சீட்டும் இருந்தது. அதில், ‘அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், டிஜிபிக்கும், உளவுத்துறை அதிகாரி களுக்கும் இதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இரண்டு கடிதங்களும் ஆங் கிலத்தில் சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தன. இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கடிதத்தை வாங் கிப் படித்தனர். அதை அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்ற ஒரு கடிதம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகேயுள்ள பத்திரிகையாளர் மன்றத்துக்கும் (பிரஸ் பிளப்) வந்துள்ளது. அதிலும் அதே வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இரண்டையும் ஒரே நபர்தான் அனுப்பியிருக்கிறார். சென்னையில் வசிக்கும் நபர்கள்தான் இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் குமார் கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்துக்கு முன்பும் இதுபோன்ற மிரட்டல் கடிதங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போது வந்துள்ள கடிதங்களை சாதாரண மிரட்டல் கடிதமாக எடுத்துக் கொள்ளாமல், அதை அனுப்பியவர்களை உடனே பிடிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், தீவிரவாத அமைப் பின் திட்டங்கள் குறித்த ரகசிய உளவு தகவல்களை பெறவும், முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

கடிதத்துடன் ஒரு துண்டுச் சீட்டும் இருந்தது. அதில், ‘அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், டிஜிபிக்கும், உளவுத்துறை அதிகாரி களுக்கும் இதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x