

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ''தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தாக்கி இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளனர். 319 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 187 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிண்டியில் உள்ள கிங் மருத்துவ ஆய்வகம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படுகிறது'' என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.