

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட் டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.
துணை வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,064 காலியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மெயின் தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. நேற்று இரவு இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.