

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் கள் பயணம் செய்த கார், திண்டி வனம் அருகே சாலை தடுப்பு கட்டையில் மோதியதில் பெண் டாக்டர் உயிரிழந்தார். மேலும் 2 டாக்டர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப் பாக்கத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவருடைய மகள் பிரணவ பிரியா (23). சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து வந்தார். இவர், தனது தோழிகளான டாக்டர்கள் பிரித்தி (23), திரிமேணி (24) ஆகியோருடன் நேற்று முன் தினம் புதுச்சேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு காரில் வந்திருந்தார்.
திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகு, அன்று இரவு புதுச்சேரியில் தங்கியிருந்து விட்டு நேற்று அதிகாலையில் மீண்டும் காரில் அச்சரப்பாக்கத்துக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். காரை பிரணவ பிரியா ஓட்டினார்.
காலை 6.30 மணிக்கு திண்டிவனத்தை அடுத்த மொளசூர் கிராமம் அருகே கார் சென்றபோது சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் பயங்கரமாக மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் பிரணவ பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், காரில் பயணம் செய்த பிரித்தி, திரிமேணி ஆகிய மற்ற 2 பெண் டாக்டர்களும் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக கிளியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.