Published : 21 Mar 2015 08:58 AM
Last Updated : 21 Mar 2015 08:58 AM

சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பேர் பலி

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர், ஆசிரியை உட்பட 3 பேர் பன்றிக் காய்ச்சலால் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனியார் நிறுவன ஊழியர் பலி

சைதாப்பேட்டை (மேற்கு) ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் சேகர் (58). மதுரவாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட் டிங் பிரிவில் பணியாற்றி வந்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 14-ம் தேதி சிகிச்சைக் காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குறையவில்லை.

இதையடுத்து, அவருக்கு 18-ம் தேதி பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. 19-ம் தேதி மாலை வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்று நள்ளிரவு 1 மணி அளவில் அவரை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் சேர்த்து தமிழகத்தில் 14 பேர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது:

சேகரின் உடலில் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்தன. அவர் செயற்கை சுவாசத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில், பன்றிக்காய்ச்சலும் வந்ததால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவர் வசித்து வந்த மேற்கு சைதாப்பேட்டை ராஜகோபால் தெருவில் வசிப்பவர்களுக்கு டாமி ஃபுளூ மாத்திரை கொடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆசிரியை உயிரிழப்பு

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த தனியார் பள்ளி ஆசிரியை பன்றிக் காய்ச்சலில் உயிரிழந்ததாக தெரியவந் துள்ளது.

பூந்தமல்லி அடுத்த அகரம் மேல் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (40). இவரது மனைவி நீலவேணி (34). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்த நீலவேணி, கடந்த 5 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் நீலவேணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நீலவேணி பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததாக உறவினர்கள் தெரிவித்ததால் மருத்துவமனை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ராஜ்குமார் கூறும்போது, ‘நீலவேணி என்ற பெண் பன்றிக் காய்ச்சலால் உயிரிழக்கவில்லை’ என்று மறுப்பு தெரிவித்தார்.

மேலும் ஒருவர் மரணம்

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (34). இவர் கடந்த 16-ம் தேதியிலிருந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அவருக்கு காய்ச்சல் குணமடையாததால், பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டு அதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நாகராஜன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x