

அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதில் அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.இந்த காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மார்ச் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய அங்கன்வாடி பணியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு 40 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு சமைப்பதற்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டும்.'' என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.