Published : 09 Mar 2015 10:16 AM
Last Updated : 09 Mar 2015 10:16 AM

திண்டிவனத்தில் மருத்துவரின் அலட்சியத்தால் இளைஞர் உயிரிழப்பு?- பொதுமக்கள் முற்றுகை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் மகன் கார்த்தி கேயன்(25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை தனது பைக்கில் காட்டு மன்னார்கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.

திண்டிவனம் அருகே மேல் பேட்டை பகுதியில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கார்த்திகேயனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனை யின் அவ சரப் பிரிவில் கார்த்திகேயனை சேர்த்தனர். அங்கு பணியிலிருந்த

செவிலியர்கள் கார்த்திகேயனுக்கு முதலுதவி அளித்தனர். எனினும் வலியால் அவர் துடித்தார். வெகு நேரம் ஆகியும்கார்த்திகேயனை பணியில் இருந்த மருத்துவர் பரிசோதிக்கவோ, மேல் சிகிச்சைக்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கடுமையான வலியில் துடித்துக்கொண்டிருந்த கார்த்திகேயன் உயிரிழந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் ஆவேசம் அடைந்து மருத்துவர் அறையை முற்றுகையிட்டனர். ஆனால் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லையென கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் திண்டிவனம் எம்எல்ஏ ஹரிதாஸ் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இது தொடர்பாக எம்எல்ஏ ஹரிதாஸை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணியில் இருந்த மருத்துவர் பிரேத பரி சோதனையில் இருந்துள்ளார். விபத்தில் அடிபட்டவருக்கு சிகிச்சை அளிக்க அவர் வந்து இருக்கலாம். ஆனால் ஏனோ அவர் வரவில்லை.

கடுமையான வலியில் இருந்த அந்த இளைஞருக்கு வலியினால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும், ரத்த ஓட்டம் தடைபட்டதாலும் இறந்திருக்கலாம். இது தொடர்பாக நடந்த விவரங்களை சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜோதியிடம் தெரிவிக்க உள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x