Published : 15 Mar 2015 11:35 AM
Last Updated : 15 Mar 2015 11:35 AM

பெரம்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு பேட்மிண்டன் வீரர் மரணம்: திருவள்ளூர் வரை உடலை இழுத்துச் சென்றதால் பரபரப்பு

ஏற்காடு விரைவு ரயிலில் அடிபட்டு பேட்மிண்டன் வீரர பலியானார். அவரது உடல் பெரம்பூரில் இருந்து திருவள்ளூர் வரை இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு ஏற்காடு விரைவு ரயில் புறப்பட்டது. திருவள்ளூர் ரயில் நிலையம் வந்தபோது ரயிலின் இன்ஜின் முன்புறம் ஆண் சடலம் தொங்கியபடி இருந்தைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து இன்ஜின் டிரைவரிடம் கூறினர். அவர் ரயில்வே போலீ ஸுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸார் வந்து ரயிலில் சிக்கி யிருந்த சடலத்தை மீட்டனர். பையில் இருந்த அடையாள அட்டை மூலம் இறந்தவர் பேட்மிண்டன் வீரர் பவித்ரன் என்பதும், சென்னை பெரம்பூர் திருவிக நகரைச் சேர்ந்த லோகநாதனின் மகன் என்பதும் தெரியவந்தது.

பவித்ரன் மாநில அளவில் நடை பெறும் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று வந்தார். தற்போது திருவான்மியூரில் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் காலை பவித்ரன் திருவான்மியூர் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

பவித்ரன் வழக்கமாக வெளி யில் சென்று விட்டு வீடு திரும் பும் போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் ஏறி பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டுக்குச் செல்வது வழக்கம். நேற்றுமுன்தினம் திருவான்மியூரில் பேட்மிண்டன் போட்டியில் பங் கேற்றுவிட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலம் அவர் பெரம்பூர் லோகோ நிலையத்தில் இறங்கியுள்ளார். அங்கு அவர் தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது ஏற்காடு விரைவு ரயிலில் மோதி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. ரயில் மோதிய வேகத்தில் பவித்ரனின் உடல் ரயில் இன்ஜினின் முன் பகுதியில் சிக்கிக் கொண்டது. அது திருவள்ளூர் வரை இழுத்து செல்லப்பட்டுள்ளது.

இதுபற்றி அவரது பெற் றோருக்கு தகவல் தெரிவித்த போலீஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு திருவள் ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x