Published : 26 Mar 2015 01:49 PM
Last Updated : 26 Mar 2015 01:49 PM

வாட்ஸ்அப், பேஸ்புக்கில் தீவிரம் காட்டும் மதுரை போலீஸ்

மதுரை மாநகர காவல்துறைக்கென தனி இணையதளம், பேஸ்புக் முகவரி, வாட்ஸ்அப் புகார் எண், ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் ஆகியவை செயல்படத் தொடங்கியுள்ளது.

மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் இவற்றின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவல்துறையிடம் அவசர தகவலை பகிர்ந்து கொள்வதற்காக 100 என்ற தொலைபேசி எண் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. தற்போதைய தலைமுறையினரிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, தகவல் தொடர்பு முறையிலும் மாற்றங் களை கொண்டு வந்துள்ளோம். பயனுள்ள தகவல்களை மக்க ளுக்கு பகிர்வதற்காகவும், குற் றங்கள் நடக்காமல் முன் கூட்டியே தடுப்பதற்காகவும், மக்களி டமிருந்து புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பதற்காகவும் குற்றத்தடுப்பு பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 4 வகையான திட்டங்கள் இடம் பெறுகின்றன.

புகார் அளிக்க அழைப்பு

மாநகர காவல்துறையின் அன்றாட நிகழ்வுகள், முக்கிய தகவல்கள், அறிவிப்புகள் போன்றவற்றுடன் www.maduraicitypolice.com என்ற இணையதளம் உருவாக்க ப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதன் வாயிலாகவும் புகார் செய்யலாம். இதுதவிர தமிழக மற்றும் தேசிய அளவிலான காவல்துறை தொடர்புடைய இணையதளங்களை தொடர்பு கொள்வதற்கான முகவரி இணை ப்பும் இதில் இருக்கும். அதேபோல் வாட்ஸ்அப் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.

எனவே பொதுமக்களிடமிருந்து வாட்ஸ்அப் மூலம் ஆலோசனைகள், குற்றத் தடுப்பு தகவல்கள், புகார்களைப் பெறுவதற்காக 8300021100 என்ற பிரத்யேக செல்போன் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தகவல் அனுப்புவர் குறித்த ரகசியம் காக்கப்படும். மேலும் தகவலை பெற்றுக் கொண்டதற்கான பின்னூட்டமும் சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

காவல்துறையில் இருவழி தகவல் தொடர்பினை உறுதிப்படுத்தும் வகையில் >commissioner of police madurai city என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் தொடங்கப் பட்டுள்ளது. இதில் நாங்கள் மக்களுக்கு தெரிவிக்க விரும்பும் கருத்துக்கள் உடனுக் குடன் பதிவேற்றம் செய்யப்படும். அதேபோல் பொது மக்களும் தங்களுடைய கருத்துகள், புகார்களை இதில் தெரிவிக்கலாம். மேலும் காவல்துறையிடம் சுட்டிக்காட்ட விரும்பும் குறைகள் ஏதேனும் இருப்பினும் அதையும் புகைப்படத்துடன் பதிவு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் பாதுகாப்புக்கு எஸ்ஓஎஸ்

தற்போது பெரும்பாலா னவர்கள் நவீன ரக மொபைல் போன்களை பயன்படுத்து கின்றனர். எனவே தகவல்தொடர்பினை எளிதாக்கும் வகையில் madurai city police என்ற ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளோம். இதனை மாநகர காவல்துறை இணையதள முகவரி வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விரைவில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மாநகரில் செய்யப்படும் போக்கு வரத்து மாற்றங்கள் குறித்து இந்த அப்ளிகேஷனில் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இதில் எஸ்.ஓ.எஸ் (save our sole) வசதி அளிக்கப்பட்டுள்ளதால் அவசர காலங்களில் காவல்துறையை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.

குறிப்பாக ஆபத்தான சூழ்நிலை களில் இருக்கும் பெண்களுக்கு மிக உதவியாக இருக்கும். அவர் பேசவேண்டிய அவசியமில்லை. எஸ்.ஓ.எஸ்-ல் கிளிக் செய்தால் போதும். அதிலுள்ள ஜிபிஎஸ் மூலம் அந்த பெண் எங்கு உள்ளார் என்ற விவரம் இ மெயில் வழியாக அரை நொடிக்குள் எங்களுக்கு வந்துவிடும். உடனே போலீஸார் அங்கு சென்று சம்பந்தப்பட்டவர்களை மீட்கவோ அல்லது உதவவோ முடியும்.

ஒத்துழைக்க வேண்டுகோள்

இந்த திட்டங்கள் நல்ல நோக்கத்துடன் அறிமுகப்ப டுத்தப் பட்டுள்ளன. பொதுமக்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற தகவல்க ளையோ, வேண்டுமென்றே அலைக்கழிக்கச் செய்யும் வகையிலான தகவல்க ளையோ இவற்றில் பதிவு செய்ய வேண்டாம். காவல்துறைக்கு மக்கள் உரிய ஒத்துழைப்பு கொடுத்தால், நிச்சயம் குற்றங்களை குறைத்துவிட முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x