

பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்டு கட்சி உறுப்பினர் அண்ணா துரை எழுப்பிய கேள்விக்கு கைத்தறித் துறை அமைச்சர் கோகுலஇந்திரா அளித்த பதில்:-
தமிழகத்தில் கைத்தறி நெசவா ளர்களுக்காக ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா எனும் புதிய நல் வாழ்வு காப்பீட்டுத் திட்டம் யுனை டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படு கிறது.
இத்திட்டத்தின் கீழ் 5 உறுப் பினர்கள் கொண்ட ஒரு நெசவாளர் குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை உள்நோயாளி மருத் துவ சிகிச்சைக்கும், ரூ.7,500 வரை புறநோயாளி மருத்துவ சிகிச்சைக் கும் பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது மருத்துவ செலவு அதிகரித்திருப்பதால் இத்தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர் கோரியுள்ளார். இது, மத்திய அரசு திட்டம் என்பதால், காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசுடன் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.