

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக் கத்தை அடுத்த திருமுக்கூடல் பகுதியில், பாலாற்றின் கரையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இது, தொல் லியல் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை அர்ச்சகர்கள் கோயில் நடையைத் திறந்தபோது, மூலவர் சன்னதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கருவறையில் சுவாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் சன்னதியில் இருந்த வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் 7 கிலோ வெள்ளிப் பொருட்களும், கோயில் உண்டி யல் உடைக்கப்பட்டு அதிலி ருந்து காணிக்கைகளும் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்து, செங்கல்பட்டு ஏஎஸ்பி ஜார்ஜீ ஜார்ஜ் வந்து கோயிலைப் பார்வையிட்டார். கோயிலின் மேல்தளத்தில் காற்றுக் காக அமைக்கப்பட்டிருந்த ஜன்னல் கம்பிகளை மர்ம நபர்கள் அறுத்து, கோயிலுக்குள் புகுந்து திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.
காஞ்சிபுரம் தடயவியல் நிபு ணர்கள் கோயிலில் கிடைத்த கொள்ளையர்களின் தடயங் களைச் சேகரித்தனர். மேலும், காஞ்சிபுரத்திலிருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கோயி லின் இரவுநேரக் காவலாளி சம்பத் (42) உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோயில் செயல் அலுவலர் கேசவராஜூ அளித்த புகாரின் பேரில், சாலவாக்கம் போலீஸார் வழக்கு பதிந்தனர்.