Published : 16 Mar 2015 11:12 AM
Last Updated : 16 Mar 2015 11:12 AM

மக்கள்தொகை பதிவேடு விவரங்களை தரவேற்றுவதில் தொடரும் சிக்கல்: ஆதார் பதிவுக்காக அலைக்கழிக்கப்படும் மக்கள்

மக்கள்தொகை பதிவேடு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதில் சிக்கல் ஏற்படுவதால், பொதுமக்கள் ஆதார் அட்டைக்கான விவரங்களை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் யூஐடிஏஐ நிறு வனம் தலைமையில் ஆதார் அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை வழங்குவதற்கான பொது மக்களின் விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்து இணையதளத்தில் தரவேற்றும் பணியை யூஐடிஏஐ நிறுவனத்துக்கு பெங்களூருவில் உள்ள பிஇஎல் நிறுவனம் செய்து கொடுக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 கோடியே 19 லட்சத்து 49 ஆயிரத்து 883 பேர்களின் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதில் 4 கோடியே 85 லட்சத்து 96 ஆயிரத்து 395 பேருக்கு (77 சதவீதம்) ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ளவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக தற் போது தமிழகம் முழுவதும் 522 இடங்களில் ஆதார் நிரந்தர மையங்கள் தொடங்கப்பட்டு, பொதுமக்களின் விவரங்களை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் சென்னையில் மட்டும் 61 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள்தொகை பதிவேட்டில் பெயர்கள் இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்து வருகின்றனர்.

இவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றி னால் மட்டுமே, ஆதார் நிரந்தர மையங்களில் பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்ய முடியும். ஆனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் கொடுக் கப்பட்ட பலரது மக்கள்தொகை பதிவேட்டு விவரங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் படவில்லை. இதனால் பொது மக்கள் பலமுறை ஆதார் மையங் களுக்கு வந்தும், இணையத்தில் விவரங்கள் இல்லாததால், அவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்ய முடியாமல் பலமுறை திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்கக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மக்கள்தொகை பதிவேட்டு விவரங்களை பிஇஎல் நிறுவனம் தான் இணையதளத்தில் பதி வேற்றி வருகிறது. தொழில் நுட்ப காரணங்களால் அதை பதி வேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு ஒரு சிலரின் விவரங்கள் இணைய தளத்தில் கிடைக்கவில்லை. அத னால் அவர்களின் ஆதார் விவரங் களை பதிவு செய்ய முடியவில்லை. இது குறித்து பிஇஎல் நிறுவனத் துடன் பேசி இப்பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x