

சகாயம் ஐஏஎஸ் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்த கிரானைட் நிறுவன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தில் நடந்த தாகக் கூறப்படும் கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிப்பதற் காக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டது. அதன்படி, சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன இயக்குநர் ஏ.பாலசுப்பிரமணியனுக்கு சகாயம் நோட்டீஸ் அனுப் பினார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாலசுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்தும், சகாயம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலசுப்பிரமணியன் மேல்முறை யீடு செய்தார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகி யோரைக் கொண்ட முதல் அமர்வு இந்த மனுவை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
கிரானைட் முறைகேடு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக் கிறது.
விசாரணைக்கு ஒத்துழைக் காமல், மனுதாரர் அவசரகதியில், உறுதியற்ற அடிப்படையில் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
எனவே, தகுதியற்ற இந்த மனுவை தள்ளுபடி செய்வதுடன் மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். இந்த தொகையை உயர் நீதிமன்ற வளா கத்தில் உள்ள சமரச மையத்தில் 15 நாட்களுக்குள் செலுத்த வேண் டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோல, கிரானைட் முறை கேடு புகார் தொடர்பாக சகாயம் ஐஏஎஸ் மற்றும் மதுரை கலெக்டர் அனுப்பிய நோட்டீஸ்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.