

கொடைக்கானலில் கோடை விழா நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கோடை விழாவுக்காக தயார்படுத்தப்படும் பிரையண்ட் பூங்காவில், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் தற்போதே மலர்களில் மொட்டுகள் விரிந்து பூத்து குலுங்க தொடங்கியுள்ளன.
கொடைக்கானலில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணி களை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மே 3-வது வாரத்தில்
இந்த ஆண்டு, மே 3-வது வாரத்தில் கோடை விழா நடத்து வதற்கான ஏற்பாடுகளை சுற்று லாத்துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றன. கோடை விழாவின் சிறப்பாக, பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் விதவிதமான மலர்ச் செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்க ஏற்பாடு செய்யப்படும்.
காய்கறிகள், பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட காய்கறி கண்காட்சியும் நடத்தப் படும். சுற்றுலாப் பயணிகள், கண் காட்சியில் வைக்கப்பட்ட அலங் காரங்கள், பூங்காவில் பூத்துள்ள மலர்களுக்கு மத்தியில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள்.
இந்த ஆண்டு கோடை விழா வுக்காக பூங்காவில் நடப்பட்ட மலர் செடிகளில் இப்போதே பூக்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கி யுள்ளன.
இதுகுறித்து பிரையண்ட் பூங்கா ஊழியர்கள் கூறியதாவது: நடப்பாண்டு பூங்காவில் மொத்தம் 3 லட்சம் மலர் செடிகள் நடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாடர் கிராப் மலர் செடிகள் நடப்பட்டுள்ளன. புதிய மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
மாலை நேரம் பூங்காவில் கூடுதலாக ஒரு மணி நேரம் சுற்றுலாப் பயணி களை அனுமதிக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. குழந்தை களை மகிழ்விக்க பழுதடைந்த இசை நீருற்றுகள் சரி செய்யப்பட்டுள்ளன என்றார்.