Published : 17 Mar 2015 08:38 AM
Last Updated : 17 Mar 2015 08:38 AM

இந்திய கம்யூ. முன்னாள் எம்எல்ஏ கூத்தகுடி சண்முகம் மறைவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் எம்எல்ஏ வும், லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவருமான கூத்தகுடி சண்முகம்(92) உடல்நலக் குறைவால் காரைக்குடி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலமானார்.

இவரது சொந்த ஊர் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கூத்தகுடி கிராமம். இவருக்கு மனைவி செல்லமுத்து, மகன் சட்டநாதன், மகள்கள் கண்ணகி, சொர்ணமீனாள் ஆகியோர் உள்ளனர்.

1977 முதல் 80 வரை திருப்பத் தூர் சட்டப் பேரவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார். மாணவப் பருவம் முதல் கம்யூனிசக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அடக்குமுறைக்கு எதிராகச் செயல்பட்டார். சுதந்திரப் போராட்டங்களிலும், விவசாயிகள் நடத்திய பல்வேறு போராட் டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யில் இருந்து விலகி, லெனின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கி அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்டார்.

கூத்தகுடியில் உள்ள அவரது சொந்த தோட்டத்தில் இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. லெனின் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இரங்கல் கூட்டம் நடை பெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி நல்லகண்ணு, காங்கிரஸ் எம்பி சுதர்சன நாச்சியப்பன் உட்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா இரங்கல்

சண்முகம் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சமக தலைவர் சரத்குமார் உள்ளிட் டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x