

குழந்தைகள் நலக் குழுமம் மற்றும் சமூகப் பணி ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில், 2006-ம் ஆண் டின் இளைஞர் நீதி (குழந்தை களின் பராமரிப்பு மற்றும் பாது காப்பு) திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகளின் படி அமைக்கப் பட்டுள்ள, இளைஞர் நீதிக் குழுமத்துக்கான சமூகப் பணி உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள் ளனர். இதற்காக, அனைத்து மாவட் டங்களிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் மற் றும் குறைந்தபட்சம் 35 மற் றும் அதிகபட்சம் 65 வயது உடையவர்கள் மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப் பிக்கலாம். ஏற்கெனவே குழந்தை கள் நலக் குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இளைஞர் நீதிக் குழுமத்தில் சமூகப்பணி உறுப்பினராக உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சமூக பணி உறுப்பினர் பணி யிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளைங் கலை பட்டம், குற்றவியல், உளவி யல், சமூகவியல், சமூகப்பணி, பொருளாதாரம், மனையியல், அரசியல், அறிவியல், பெண்கள் சம்பந்தப்பட்ட பட்டம், ஊரக வளர்ச்சி, சட்டம் அல்லது மருத்து வம் ஆகிய பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்ப படிவத்தை www.tn.gov.in/departments/30 என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை, செய்தி வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்கள் வரை, ஆணையர், சமூகப் பாதுகாப்புத் துறை, எண்.300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை கெல்லீஸ், சென்னை-600010 என்ற முகவரிக்கு அனுப்பலாம். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். அரசின் முடிவே இறுதியானது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.