

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் முதல் முறையாக நேற்று திருத்தணி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தொட்டது.
தமிழகத்தில் மார்ச் மாதத்தில் வெயில் அதிகரிக்கத் தொடங்கி ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதன்படி கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று அதிகப்பட்சமாக திருத்தணியில் 101.30 டிகிரியும், சேலத்தில் 100.40 டிகிரியும், வேலூரில் 99.50 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 93.38 டிகிரியும், மீனம்பாக் கத்தில் 95.36 டிகிரியும் பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.