Published : 14 Mar 2015 09:44 AM
Last Updated : 14 Mar 2015 09:44 AM

மாவட்ட அளவில் நிலச்சீர்திருத்த அலுவலகம்

நிலச்சீர்திருத்தம் தொடர்பான பணிகளை கவனிப்பதற்காக தமிழ்நாட்டில் விழுப்புரம், திருச்சி, மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, மயிலாடுதுறை என 6 இடங்களில் மண்டல அளவில் நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் அலுவலகங்கள் முன்பு இயங்கி வந்தன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) என்ற புதிய பதவி ஏற்படுத்தப்பட்டு துணை ஆட்சியர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

முன்பு பல மாவட்டங்களுக்கு சேர்ந்து மண்டல அளவில் ஒரு உதவி ஆணையர் இருந்து வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நியமிக்கப்படுவதால் நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் குறித்த விவரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு அந்த அதிகாரி உடனடியாக கொண்டுசென்று நடவடிக்கை எடுக்க முடியும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x