

7 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல் துறை இயக்குநர் அசோக்குமார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி கபிலன் திருச்சி மாநகரம் ரங்கம் உதவி ஆணையராகவும், திருச்சி ஸ்ரீரங்கம் உதவி ஆணையராக இருந்த மாதவன் திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை உதவி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரபாகரன் சென்னை சிபிசிஐடி டிஎஸ்பியாகவும், வினோத் சாந்தாராம் நீலகிரி மாவட்ட ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகர உதவி ஆணையராக இருந்த விவேகானந்தன் சேலம் நில மோசடி பிரிவு உதவி ஆணையராகவும், சேலம் மாநகர உதவி ஆணையராக இருந்த கஜேந்திரன் நாமக்கல் மாவட்ட ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும், சென்னை சிபிசிஐடி டிஎஸ்பியாக இருந்த கேசவன் சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி டிஎஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.