

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைப் பகுதியில் ரூ.4.91 கோடியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதாக பொய் கணக்கு எழுதுமாறு ஆளுங் கட்சியினர் மிரட்டியதால் பொதுப் பணித்துறை பொறியாளர் குமார சாமி விருப்ப ஓய்வில் சென்று விட்டதாக கனிமொழி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் வேளாண்மை பொறியாளர் முத்து குமாரசாமி தற்கொலை விவ காரத்தை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இங்குள்ள முத்துகுமாரசாமியின் வீட்டுக்கு நேற்று கனிமொழி எம்.பி சென்று பின்னர். அவரின் குடும்பத் தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது:
கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி தற்கொலை விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக் கிறது. ஆனால், தமிழகத்தில் வேளாண்மைத்துறை பொறியாளர் முத்துகுமாரசாமி தற்கொலை விவகாரத்தை மாநில அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அமைச்சர் பொறுப்பிலிருந்தும், கட்சி பொறுப்பிலிருந்தும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நீக்கியிருக்கி றார்கள். அவர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை அதிமுக கூறவில்லை.
மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துள்ள முத்துகுமார சாமி தற்கொலை விவகாரம் குறித்த விசாரணை முறையாக நடைபெறவில்லை. அவரது குடும் பத்தாருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போதைய நிலையே தொடர்ந்து நீடித்தால், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.
விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரி
மணிமுத்தாறு அணை புனர மைப்பு பணிக்கு ரூ.4.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. புனரமைப்பு பணி நடைபெற்றதாக பொய் கணக்கு எழுதி ரசீது களை தயாரிக்குமாறு பொதுப் பணித்துறை பொறியாளர் குமார சாமியை ஆளுங்கட்சியினர் நிர்பந்தம் செய்துள்ளனர். இதனால் குமாரசாமி நீண்ட விடுப்பு எடுத்துள்ளார். ஆனால், தொடர்ந்து ஆளுங்கட்சியினர் மிரட்டி வந்துள்ளனர். அச்சமடைந்த அவர் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.
காசநோய் பணியாளர்கள் நிய மனத்தில் பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தகவல் கள் வெளிவரத் தொடங்கி யிருக்கின்றன. ஆளுங்கட்சியினர், அனைவரையும் மிரட்டி காசு வாங்கும் நிலை உள்ளது. எதிர்க் கட்சி என்ற முறையில் திமுக தனது கடமையை செய்து வருகிறது.