

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 37 பேரும் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்தார்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டது.
கன்னியாகுமரி, தர்மபுரி மற்றும் புதுச்சேரி தவிர மற்ற 37 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது தனிப் பெரும் கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், அதிமுகவின் புதிய எம்.பி.க்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து ஆசி பெற்றதாக அக்கட்சியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வி.என்.பி. வெங்கட்ராமனும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.