கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது
Updated on
1 min read

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் போடாமல் இருப்பதால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே அனைவரையும் ஹெல்மெட் அணிய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்து ஹெல்மெட் அணிய வைத்தவர் டிராபிக் ராமசாமி. இவர் சட்டத்துக்குப் புறம்பாக சாலையில் வைக்கப்படும் பேனர்களை தனி ஆளாக நின்று அகற்றி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலை யில் போக்குவரத்துக்கு இடையூ றாக வைக்கப்பட்டிருந்த பேனர் கள் குறித்து தனியார் தொலைக் காட்சிக்கு சாலையில் நின்று பேட்டி அளித்தார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வீரமணி வேப்பேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், “டிராபிக் ராமசாமி தன்னுடன் வாக்குவாதம் செய்து தனது கார் கண்ணாடியை உடைத்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

புகாரின்பேரில் டிராபிக் ராம சாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை உடைத்தல் உள்ளிட்ட 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாண்டி பஜாரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த டிராபிக் ராமசாமியை, நேற்று காலையில் வேப்பேரி போலீஸார் திடீரென கைது செய்தனர்.

பின்னர் எழும்பூர் 14-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ் திரேட் கயல்விழியின் வீட்டில் ஆஜர்படுத்தினர்.

அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ் திரேட் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து டிராபிக் ராமசாமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in