

கடல் ஆராய்ச்சிக்கான ஐஆர்என் எஸ்எஸ்-1டி செயற்கைக் கோளை பிஎஸ்எல்வி - எக்ஸ்எல் ராக்கெட் மூலம் வரும் 9-ம் தேதி விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் எம்.ஒய்.எஸ்.பிரசாத் கூறியதாவது:
கடல்சார் ஆராய்ச்சிக்கான ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக் கோளை பிஎஸ்எல்வி - எக்ஸ்எல் ராக்கெட் மூலம் வரும் 9-ம் தேதி மாலை 6.35 மணி அளவில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முதல்கட்ட பரிசோதனை முடிந்துவிட்டது. செவ்வாய்க்கிழமை (இன்று) மீண்டும் முழு பரிசோதனை நடத்தப்படும்.
செயற்கைக் கோள் ஏவுவதற்கு அனுமதி அளிக்கும் வாரியத்தின் இறுதி அனுமதி ஆணையைப் பெறவேண்டி உள்ளது. அந்த வாரியத்தின் கூட்டம் 6-ம் தேதி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
1,425 கிலோ எடை கொண்ட ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கான 59 மணி நேர கவுன்ட் டவுன் 7-ம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது.