

சிறப்பு ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பட்டதாரிகளுக்கு தமிழக அரசு பணி வழங்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பட்டதாரிகளுக்கு பணி வழங்க வேண்டும் என கோரி கடந்த 9 நாட்களாக பார்வையற்ற ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தங்களுடைய கோரிக்கை நிறைவேற பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கி றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.