

விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை விமான நிலைய ஊழியர்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லாபத்தில் இயங்கக்கூடிய சில விமான நிலையங்களைத் தனியார் மயமாக்க மத்திய அரசு துணை போகிறது என்று விமான நிலைய ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தைப் ஆய்வு செய்ய வரும் தனியார் நிறுவனத்திற்கும், அதற்கு வழிவகை செய்த அரசுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் மத்திய அரசு, விமானப் போக்குவரத்து துறை அமைச்சருக்கு எதிராக ஊழியர்கள் முழக்கமிட்டனர். இந்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்தும்,வரும் 11-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஊழியர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.