

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜாதி கொலைகளைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீஸ் அதிகாரிகள் பாரபட்சமின்றி தங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்று டிஜிபி அசோக்குமார் கேட்டுக்கொண்டார்.
திருநெல்வேலியில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் 3 மணி நேரம் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத் துக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜாதி கொலைகளைத் தடுக்க வும், சட்டம் ஒழுங்கை பாதுகாக் கவும் பாரபட்சமின்றி தங்கள் கட மையை ஆற்ற வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜாதி மோதல் தொடர்பான அனைத்து கொலை வழக்குகளி லும் குற்றவாளிகள் கைது செய் யப்பட்டிருக்கிறார்கள். கொலை களைத் தடுக்க எல்லா பகுதிகளிலும் போலீஸார் இருக்க முடியாது என்றார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பெண் நீதிபதி தாக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிஜிபி, `இந்த தாக்குதல் விவகாரத்தில் காவல்துறை சரியான கோணத்தில் விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு தனிப்பட்ட முன் விரோதம் காரணமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது’ என்றார்.
முன்னதாக நேற்று காலையில் தூத்துக்குடியில் அம்மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.