

தனியார் தொழிற்சாலைகளில் காலியாக உள்ள தொழிற் பழகுநர் பயிற்சி இடங்கள் நிரப்பப் பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்குகிறது அரசினர் தொடர் அறிவுரை மையம். இம்மையத்தின் எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர், திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் இயந்திரங்கள், இயந்திர உதிரி பாகங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் 136 தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் உள்ள 6,835 தொழிற் பழகுநர் பயிற்சி இடங்களில், தற்போது 6,092 இடங்கள் காலியாக உள் ளன. இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எனவே, தனியார் தொழிற் சாலைகளில் தொழிற் பழகுநர் பயிற்சி பெற விரும்பும், அகில இந்திய தொழிற் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஐ.டி.ஐ. பயிற்சியாளர்கள், கல்வி மற்றும் தொழிற்கல்வி சான்றிதழ்களுடன் அம்பத்தூரில் இயங்கும் அரசினர் தொடர் அறிவுரை மையத்தினை அணுகலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.