Published : 19 Mar 2015 10:21 AM
Last Updated : 19 Mar 2015 10:21 AM

கூட்ட நெரிசலை சமாளிக்க கோவை, பழநி, திருச்சி உட்பட 8 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக கோவை, பழநி, திருச்சி உட்பட எட்டு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயணிகளின் கூட்ட நெரி சலை சமாளிப்பதற்காக பின் வரும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக் கப்படுகின்றன. இதன்படி, கோயம் புத்தூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் கொங்கு வாராந்திர விரைவு ரயிலில் (வண்டி எண்.12647/48) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மார்க்கத்தில் வரும் 22-ம் தேதியில் இருந்தும், நிஜாமுதீன் மார்க்கத்தில் 25-ம் தேதியில் இருந்தும் இப்பெட்டி இணைக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி-ஹவுரா விரைவு ரயிலில் (12664/63) கூடுதலாக ஏ.சி. மூன்று அடுக்கு வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும். திருச்சி மார்க்கத்தில் வரும் 20-ம் தேதியில் இருந்தும், ஹவுரா மார்க்கத்தில் 22-ம் தேதியில் இருந்தும், இணைக்கப்படும்.

கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயிலில் (12682/81) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும்.

கோயம்புத்தூர் மார்க்கத்தில் வரும் 20-ம் தேதியில் இருந் தும், சென்ட்ரல் மார்க்கத்தில் 22-ம் தேதியில் இருந்தும், இணைக் கப்படும்.

சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் விரைவு ரயிலில் (12689/90) கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும். சென்ட்ரல் மார்க்கத்தில் வரும் 20-ம் தேதியில் இருந்தும், நாகர்கோவில் மார்க்கத்தில் 22-ம் தேதியில் இருந் தும் இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரல்-ஜம்முதாவி அந்தமான் விரைவு ரயிலில் (16031/32) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும். சென்ட்ரல் மார்க்கத்தில் 18-ம் தேதியில் (நேற்றுமுதல்) இருந்தும், ஜம்முதாவி மார்க்கத்தில் 20-ம் தேதியில் இருந்தும் இணைக்கப் படும்.

சென்னை சென்ட்ரல்-லக்னோ விரைவு ரயிலில் (16093/94) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும். சென்ட்ரல் மார்க்கத்தில் வரும் 21-ம் தேதியில் இருந்தும், லக்னோ மார்க்கத்தில் 23-ம் தேதியில் இருந்தும் இணைக் கப்படும்.

ராமேசுவரம்-ஒகா வராந்திர விரைவு ரயிலில் (16733/34) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும். ராமேசுவரம் மார்க்கத்தில் வரும் 20-ம் தேதியில் இருந்தும், ஒகா மார்க்கத்தில் 24-ம் தேதியில் இருந்தும் இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரல்-பழநி விரைவு ரயிலில் (22651/52) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும். சென்ட்ரல் மார்க்கத்தில் 18-ம் தேதியில் (நேற்று முதல்) இருந்தும், பழநி மார்க்கத்தில் 19-ம் தேதியில் (இன்று) இருந்தும் இப்பெட்டிகள் இணைக்கப்படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x