

திருவள்ளூர் அருகே ஆதார் அட்டை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் அருகே உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையையொட்டி அம்மணம் பாக்கம், சேத்துப்பாக்கம், மாகரல், கொமக்கம்பேடு ஆகிய ஊராட்சி பகுதிகள் உள்ளன. இப்பகுதி களில் வசிக்கும் பொதுமக்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு, இதுவரை ஆதார் அட்டை வழங்குவதற்காக புகைப்படம் உள்ளிட்ட பதிவுகள் மேற் கொள்ளவில்லை என்று கூறப் படுகிறது. ஏற்கெனவே புகைப் படம் உள்ளிட்ட பதிவுகள் மேற் கொள்ளப்பட்டவர்களுக்கும் இன் னும் ஆதார் அட்டை வழங்க வில்லை என கூறப்படுகிறது.
ஆதார் அட்டை இல்லாததால், முதியோர் உதவித் தொகை, சிலிண்டர் மானியம், 100 நாள் வேலை உள்ளிட்ட திட்டங்களில் அமணம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை அதிகாரி கள் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று காலை, அமணம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் ஆதார் அட்டை வழங்க வேண்டும் எனக் கோரி, தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சம்பத், கிளைச் செயலாளர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன், கமல்தாஸ், அருள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.
5 மையங்கள் ஏற்பாடு
சம்பவ இடத்துக்கு வந்த திரு வள்ளூர் வட்டாட்சியர் கணேஷ் சிங், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், அம்மணம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் 5 மையங் களில், ஆதார் அட்டைக்கான புகைப்படம் உள்ளிட்ட பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக் கப்படும். அரசின் நலத் திட்டங் களுக்கு, ஆதார் அட்டை கேட்டு அதிகாரிகள் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என வட்டாட் சியர் கணேஷ் சிங் உறுதியளித் தார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் இருந்து, கலைந்துச் சென்றனர்.