

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 2012-13ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதுக்கு தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டு புரியும் இந்தியாவைச் சேர்ந்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் தொல்காப்பியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, நினைவுப் பரிசு, மதிப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டதாகும். அதேபோல வெளிநாட்டில் வசிக் கும் தமிழ் அறிஞர்களுக்கு குறள் பீடம் விருது வழங்கப்படுகிறது
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2011-12 மற்றும் 2012-13 ஆண்டுகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. 2011-12ம் ஆண் டுக்கான தொல்காப்பியர் விரு துக்கு முனைவர் எஸ்.வி.சண்முக மும், 2012-13ம் ஆண்டுக்கான விருதுக்கு தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி யும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2011-12ம் ஆண்டுக்கான குறள் பீடம் விருது, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஈவா மரியா வில்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 40 வயதுக்கு உட்பட்ட இந்தியர்களுக்கு இளம் அறிஞருக்கான விருது ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது. இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொண்டது. 2011-12ம் ஆண்டின் இளம் அறிஞர் விருதுக்கு கே.அய்யப்பன், எழில் வசந்தன், கே.ஜவஹர் ஆகியோரும், 2012-13ம் ஆண்டின் விருதுக்கு ஏ.சதீஷ், ஆர்.வெங்கடேசன், பி.ஜெய் கணேஷ், எம்.ஆர்.தேவகி, யு.அலிபாவா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்து ருவை கணினிக்கு ஏற்றவாறு உருவாக்குவதில் முக்கியப் பங் காற்றியுள்ளார். தமிழ் எழுத்துக் களை சீர்மையாக்கும் நோக்கில் கல்வெட்டு ஆராய்ச்சியில் ஈடு பட்டவர். இவர் மிகச் சிறந்த நாணயவியல் அறிஞரும் ஆவார்.