ராமதாஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமதாஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழக முதல்வருக்கு எதிராக பேசியதாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது 2013-ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

2013-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் நான் பேட்டி அளித்தேன். அப்போது, மரக்காணம் கலவரத்தில் வன்னிய இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்தேன். இதற்கு தமிழக முதல்வர் பற்றி நான் அவதூறு பேசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் என் மீது அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.

நான் அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் மீது அவதூறு கூறிய தாகவோ, அதனால் அவருக்கு துன்பம் ஏற்பட்டதாகவோ கூற முடியாது. அரசியல் காரணங் களுக்காக, உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, ஒருவர் மீது குற்ற நடவடிக்கையை தொடங்குவதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பின் பற்றப்படவில்லை. அரசியல் விரோதம் காரணமாக, அதிகார துஷ்பிரயோகம் செய்து தொட ரப்பட்டுள்ள இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் இவ்வழக்கை விசா ரித்து, “மனுதாரருக்கு எதிராக கூறப்பட்டுள்ள புகாரைப் பார்க்கும்போது தமிழக முதல்வருக்கு எதிராக அவர் எந்த குற்றச்சாட்டையும் கூறியதாக தெரியவில்லை.

எனவே, விழுப்புரம் மாவட்ட அரசு வழக்கறிஞர் தொடர்ந்துள்ள இவ்வழக்கு விசா ரணைக்கு உகந்ததல்ல. விழுப் புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தர விட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in