

கரூரில் சர்ச்சை ஏற்படக் காரணமான எழுத்தாளர் புலியூர் முருகேசனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 6) நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.
கரூர் அருகேயுள்ள புலியூ ரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு’ என்ற சிறுகதை தொகுப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளி யிட்டார். இதில், ஒரு பிரிவினர் குறித்து தவறாகச் சித்தரிக்கப்பட் டுள்ளதாகக்கூறி, கடந்த மாதம் சாலை மறியல், முற்றுகைப் போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கிடையில், கலவரத்தை தூண்டும் வகையிலும், ஆபாச மாக எழுதியதாகவும் புலியூர் முருகேசன் மீது பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, புலியூர் முருகே சன் சார்பில், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி எம்.குணசேகரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக் கோரி, ஒரு பிரிவினர் சார்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று (பிப். 6) நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.