

சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் துணைத் தூதர் பரத் ஜோஷி நேற்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இங்கிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையானது டெக்ஹப், இஸ்பிரிட் மற்றும் இந் தியா ஏஞ்சல் நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ‘கிரேட் டெக் ராக்கெட்ஷிப்’ என்ற பெயரில் தொழில்நுட்ப போட்டி ஒன்றை நடத்தியது.
இதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
இதில் பங்கேற்க 289 நிறுவனங் கள் விண்ணப்பித்தன. இறுதியில் 5 தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதன்படி, சென் னையில் உள்ள பிரில் டாட் காம், கான்குரன்ட் சொல்யூஷன்ஸ், பெங்களூருவில் உள்ள டோன் டேக், டால் வியூ மற்றும் கொச்சியில் உள்ள அக்ரிமா இன்போடெக் இந்தியா ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இவர்கள் தெரிவித்த புதிய தொழில் சிந்தனையின் அடிப்படை யில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 5 நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், கடந்த 3-ம் தேதி லண்டனுக்கு அழைத் துச் செல்லப்பட்டனர். அங்கு அவர் களுடைய தொழில்கள் குறித்து பிற தொழில் முனைவோர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும், இங்கிலாந் தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு விளக்கப் பட்டது. இவ்வாறு பரத் ஜோஷி கூறினார்.