

அரசுப் பேருந்துகளில் பயணி கள் நடத்துநர் இடையே தீராத பிரச்சினையாக இருப் பது ‘சில்லறை’. இதுதொடர் பாக ஒரு இளைஞர் சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவு செய் துள்ளார். அவர் கூறியிருப்பது:
சமீபத்தில் கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பேருந்தில் சென்றேன். ரூ.47 டிக்கெட்டுக்காக ரூ.500 கொடுத் தேன். நடத்துநர் சில்லறை இல்லை என்றார். டிக்கெட்டில் எழுதிக் கொடுங்கள், காஞ்சி பணிமனை மேலாளரிடம் வாங்கிக்கொள்கிறேன் என்றேன். சில்லறை இல்லா விட்டால் இறங்கிக்கொள் என்று கூறி, பேருந்தை நடு வழியில் நிறுத்திவிட்டார். பிறகு ஒரு பயணி சில்லறை கொடுத்து உதவினார்.
இதுதொடர்பாக ஆதாரத் துடன் முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் அனுப்பி னேன். நடத்துநர் மீது துறைரீதி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக பதில் வந்தது. என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் மாநகரப் பேருந்தில் ஏற்பட்ட சில்லறைத் தகராறில் பயணியை நடத்துநர் தாக்கிய சம்பவம் காவல் நிலையம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி நடத்துநர்கள் கூறும்போது, ‘‘தினமும் பயணிப் பவர்கள் சரியான சில்லறை தருகின்றனர். அவ்வப்போது பயணம் செய்பவர்கள்தான் ரூ.100, 500-ஐ கொடுக்கின்றனர். எங்களுக்கு போக்குவரத்து நிர்வாகம் மூலம் தினமும் காலையில் தரப்படும் 100 ரூபாய்க்கான சில்லறை ஒரு மணி நேரத்துக்குள் தீர்ந்துவிடுகிறது. பயணிகள் சில்லறை எடுத்துவந்தால்தான் இப்பிரச்சினை தீரும்’’ என்றனர்.
அரசுப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறும் போது, ‘‘எல்லா பயணிகளும் ரூ.100-ம், ரூ.500-ம் கொடுத் தால் நடத்துநரால் எப்படி சில்லறை கொடுக்க முடியும். ரிசர்வ் வங்கியில் சில்லறை வாங்கி வருவது, அதை பணிமனைகளுக்கு அனுப்புவது, அதுதொடர்பான கணக்குகளைப் பராமரிப்பது பெரும் பணி. அதற்கு போதிய ஆட்களை நியமிக்கவேண்டும். இதுகுறித்து அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
இதுபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக ரூ.500 வரை அனைவருக்குமே சில்லறை தருகிறோம். போக்குவரத்துக் கழகத்தினரும், பொது மக்களும் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளிடம் சில்லறை கேட்டுப் பெறலாம். தமிழகத்தில் 160 ஸ்டேட் வங்கிக் கிளைகள், இந்தியன் வங்கி, ஐஓபி, கனரா வங்கி, தனியார் வங்கிகள் உட்பட 287 கிளைகளில் சில்லறை விநியோக மையங்கள் அமைத் துள்ளோம். வங்கிகளில் சில் லறை தராவிட்டால் அதுபற்றி issuechennai@rbi.org.in அல்லது வங்கி வாடிக்கை யாளர் குறைதீர்ப்பாளரிடமும் www.rbi.org.in/regionalbranch/chennai/chennai.aspx இணைய தளம் மூலம் புகார் கூறலாம்.