வில்லிவாக்கத்தில் ரயில்வே மேம்பாலம்: கொளத்தூர் தொகுதி மக்கள் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

வில்லிவாக்கத்தில் ரயில்வே மேம்பாலம்: கொளத்தூர் தொகுதி மக்கள் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
Updated on
1 min read

வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் அமைக்க ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்க முயற்சி மேற்கொண்டதற்காக மு.க.ஸ்டாலினுக்கு கொளத்தூர் தொகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இத்தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சுரேஷ் பிரபு, அண்மையில் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் அமைக்க ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து மேம்பாலம் அமைக்கப்பட உள்ள இடத்தை ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது மேம்பாலம் அமைக்க முயற்சி மேற்கொண்டதற்காக அப்பகுதி மக்கள் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in