

பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "கடந்த 15-ம் தேதியன்று 4 வயது சிறுவனும், 2 வயது சிறுமியும் பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று அவர்களது தாத்தா, பாட்டி இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.
மருத்துவமனை டீன் துளசிராம் கூறும்போது, "அண்மையில், இவர்கள் அனைவரும் ஹைதராபாத் சென்று வந்துள்ளனர். அங்கிருந்து நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேவையான அளவு மருந்து, மருத்துவமனையில் உள்ளது" என்றார்.