

மூடப்பட்ட நோக்கியா செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து இயந்திரங்கள், பொருட் களை எடுத்துச் செல்ல தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்.வீரசேக ரன் உள்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா செல்போன் தயாரிப்பு தொழிற் சாலை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த நிலையில், இப்பிரச்சினை குறித்து விவாதித்து முறையிட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, “தமிழக அரசின் பலன்களை அனுபவித்து, பெருமளவு லாபம் ஈட்டிய நோக்கியா நிறுவனம், தொழிலாளிகளை நிராதரவாக விட்டுவிட்டு இயந்திரங்களையும், ஆவணங்களையும் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தது.
நோக்கியா நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டில் இருந்தே லாபத்தில் இயங்கியது. அரசு அனுமதியில்லாமல் தொழிலாளிக ளுக்கு சட்டவிரோதமாக கணக்கு முடிக்க நோக்கியா நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. எனவே, இப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைக்கும்படியும், இல்லா விட்டால், தொழிற்தகராறு சட்டப்படி, பிரச்சினை தீர்க்கப் படவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்யும்படியும் தொழி லாளர் உதவி ஆணையருக்கு (சமரசம்) அறிவுறுத்த வேண்டும். அத்துடன் நோக்கியா ஆலை திறக்கப்படும் வரை கடந்தாண்டு நவம்பரில் இருந்து ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி எம்.துரைசாமி இவ்வழக்கை நேற்று விசாரித்து, மனுவுக்கு தமிழக அரசும், நோக்கியா நிறுவனமும் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.