

போலி கிரெடிட் கார்டுகள் தயா ரித்து பல லட்சம் மோசடி செய்த 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு கடையில் நேற்று முன்தினம் இரவில் 2 பேர் செல்போன்கள் உட்பட பல எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிவிட்டு கிரெடிட் கார்டு கொடுத்தனர். அதை பரிசோதனை செய்த கடை ஊழியர்கள் அது போலியான கிரெடிட் கார்டு என்பதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து மாம்பலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித் தனர். காவல் ஆய்வாளர் அப்பாத் துரை தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பிடிபட்டவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பைவலசா கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(30), நாகப் பன்(32) என்பது தெரிந்தது. அவர் களிடம் நடத்தப்பட்ட சோதனையில் போலியான 4 கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தனர். அதை வைத்து பல சிறிய கடைகளில் செல்போன் கள், நகைகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்கெனவே வாங்கியிருப்பது தெரிந்தது.
அவர்களின் வீடுகளில் நடத்தப் பட்ட சோதனையில் 11 செல்போன் கள், ஒரு லேப்-டாப், 6 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட் டன. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம். மேலும், போலி கிரெடிட் கார்டுகள் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்கள், கார்டுகளின் தகவல் களை திருடுவதற்கு பயன்படுத் திய ஸ்கிம்மர் கருவிகள் போன்ற வற்றையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றினர். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தகவல்களை பெறுவதற்கு ஸ்கிம்மர் கருவி களை எங்கெல்லாம் பயன் படுத்தினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.