Published : 28 Mar 2015 09:37 AM
Last Updated : 28 Mar 2015 09:37 AM

மேகேதாட்டு புதிய அணை கட்டும் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் - சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்

மேகேதாட்டு பகுதியில் புதிதாக 2 அணைகள் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என்று பேரவையில் உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தினர்.

மேகேதாட்டுவில் புதிய அணை களைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு உடனடி யாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை ஆதரித்து பேசிய உறுப்பினர்கள், இப்பிரச்சினை யில், மத்திய அரசுக்கு அழுத் தம் கொடுப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அரசு தீர்மானத்தை ஆதரித்து உறுப்பினர்கள் பேசிய விவரம்:

செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி):

காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசின் போக்கு, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இருக்கிறது.

தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை):

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் சட்டப் போராட்டம் நடத்தி வென்றது போல மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் முயற்சியையும் முறியடிக்க வேண்டும்.

கதிரவன் (அகில இந்திய பார்வர்டு பிளாக்):

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மேகே தாட்டு அணை பிரச்சினையில் கர்நாடகத்தின் போக்கை தமிழக காங்கிரஸ் தலைவர் எதிர்க்கிறார். மாநிலத்துக்கு மாநிலம் காங்கிர ஸின் நிலைப்பாடு மாறுவது கண்டிக்கத்தக்கது.

எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கட்சி):

20 மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினை, டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை என்ப தால் இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்க வேண்டும்.

டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):

நதிநீர் பிரச்சினையில் அண்டை மாநிலங்கள் ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்கின்றன. அரசு தீர்மானத்தில் வருத்தம், எதிர்ப்பு என்பதுடன் ‘கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம்’ என்ற வார்த்தையையும் சேர்க்க வேண்டும்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி):

கர்நாடக அரசின் போக்கால், அந்த மாநிலம் இந்தியாவில்தான் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. முதல்வர் தலைமையில் பேரவை உறுப்பினர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கொண்ட தூதுக்குழு பிரதமரை சந்தித்து இப்பிரச்சினை குறித்து பேச வேண்டும்.

கணேஷ்குமார் (பாட்டாளி மக் கள் கட்சி):

முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, இப்பிரச்சினையில் பிரதம ருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பிரின்ஸ் (காங்கிரஸ்):

இப்பிரச் சினையில் கர்நாடகத்தை கண்டிப் பதுடன், காவிரியில் நம் உரிமையை ஒருபோதும் விட்டுத்தரக் கூடாது.

ஆறுமுகம் (இந்திய கம் யூனிஸ்டு):

விவசாயிகள், அனைத் துக் கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்துப் பேச முதல்வர் நட வடிக்கை எடுக்க வேண்டும். மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், இப்போதைய பாஜக அரசும் தமிழகத்தின் நல னைப் புறக்கணிப்பது கண்டிக்கத் தக்கது.

கே.பாலகிருஷ்ணன் (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு):

முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரதமரை சந்தித்து இப்பிரச்சினை குறித்து பேச வேண்டும். தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றம் முன்பு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும்.

துரைமுருகன் (திமுக):

அரசு தீர்மானத்தின் நோக்கத்தையும், இது கொண்டு வரப்பட்டுள்ள நேரத் தையும் பாராட்டுகிறேன். விவசாயி கள் கிளர்ந்து எழுந்து போராடு கிறார்கள். நாளை வீதிக்கு வந்து ‘பந்த்’ நடத்துகிறார்கள். அரசு தான் ‘பந்த்’ நடத்தக்கூடாது. ஆனால் ஆளுங்கட்சி சார்பில் அதில் பங் கேற்கலாமே! விவசாயிகளுக்கு மானசீகமாக ஆதரவு தெரிவிக்க பேரவைக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இப்பிரச்சினையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? கருணா நிதி, எம்.ஜி.ஆர்., ஏன் உங்கள் அம்மையார்கூட அனைத்துக் கட் சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். காவிரி பிரச்சினையில் நீங்கள் செய்ததைப் பாராட்டுங்கள். அதே நேரத்தில் நாங்கள் செய்ததை மறைக்க வேண்டாம். நம்மை விட தமிழகத்தின் நலன் பெரிது என்ற நோக்கத்தில் பணியாற்ற வேண்டும்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு முழு வடிவம் பெறுவதற்கு அது, மத்திய அரசிதழில் வெளி யிடப்பட வேண்டும். அந்த பொறுப் பும், கடமையும் உங்களிடம் இருந் தது. ஆனால், நீங்கள் அதைச் செய்யவில்லை. முன்னாள் முதல் வர் ஜெயலலிதாதான் அதற்காக நீதிமன்றத்தில் வாதாடி, போராடி ஜீவாதார உரிமையை மத்திய அரசிதழில் வெளியிட வைத்தார். அந்த பெருமை அவரையே சாரும். காவிரி உரிமையை மீட்டெடுப்பதில் எந்தவிதத்திலும் நாங்கள் உங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. அதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x