தமிழக முழு அடைப்புப் போராட்டம்: உங்கள் பகுதி எப்படி?

தமிழக முழு அடைப்புப் போராட்டம்: உங்கள் பகுதி எப்படி?
Updated on
1 min read

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடந்துவருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்திலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நீலகிரி, உதகமண்டலத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இப்போராட்டத்துக்கு அதிமுக, பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் முழு அடைப்புப் போராட்டத்தால் உங்கள் பகுதியில் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in