

ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் தொழிலாளர்கள் பெற்றிருந்த ரூ.10 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அந்த சங்கத்தின் தலை வரும் எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளருமான கண்ணையா கூறியுள்ளார்.
ரயில்வே தொழிலாளர்கள் கூட்டுறவு நாணய சங்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக நிருபர்களிடம் சங்கத்தின் தலைவர் கண்ணையா கூறியதாவது:
கூட்டுறவு நாணய சங்கம் சார்பாக ரயில்வே தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன் படி, கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் 75 சதவீத அளவில் தேர்ச்சி பெற்ற ரயில்வே தொழிலாளர்களின் குழந்தை கள் 511 பேருக்கு ரூ.9 லட்சம் உதவித்தொகை வழங்கப்படு கிறது. அதேபோல விபத்தில் இறக்கும் கூட்டுறவு சங்கத் தில் உறுப்பினர்களின் குடும்பங் களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. அதனடிப்படை யில் 23 தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு ரூ.69 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு முதல் ரயில்வே தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. கூட்டுறவு நாணய சங்கத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பெற்றிருந்த ரூ.10 கோடி கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. இந்த தொகை கூட்டுறவு சங்கம் மூலமாக அடைக் கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்ணையா கூறினார்.