Published : 05 Mar 2015 01:12 PM
Last Updated : 05 Mar 2015 01:12 PM

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவைகள் ரத்து: நாளை முதல் மே 10-ம் தேதி வரை அமல்

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை முதல் மே மாதம் 10-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக 7-ம் தேதி (நாளை) முதல் மே மாதம் 10-ம் தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன்படி, சனிக்கிழமைகளில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மதியம் 12.43, 12.56, 1.22, 1.35, 2.01, 2.23, 2.32, 3.02 மற்றும் 3.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், தாம்பரம்-கடற்கரை இடையே காலை 11.56, மதியம் 12.08, 12.47, 13.17, 1.32, 2.02, 2.15, 2.25 மற்றும் 2.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை கடற்கரை-செங்கல் பட்டு இடையே மதியம் 1.09, 1.47, 2.13, 2.47 இயக்கப்படும் ரயில்களும், திருமால்பூர் - கடற்கரை இடையே காலை 10.25 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 11.45, மதியம் 12.15, 1.00, 1.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் தாம்பரம்-எழும்பூர் இடையே விரைவு ரயில்கள் இயக்கப்படும் பாதையிலும், எழும்பூர்-கடற்கரை இடையே மூன்றாவது ரயில் பாதையிலும் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மதியம் 12.40, 12.50, 1.00 1.30, 2.00, 2.30, 3.00, 3.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல், தாம்பரம்-கடற்கரை இடையே மதியம் 12.40, 12.50, 1.15, 1.30, 2.00, 2.15, 2.45 மற்றும் 3.00 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை கடற்கரை-செங்கல் பட்டு இடையே மதியம் 1.15, 1.45, 2.15 மற்றும் 2.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் மற்றும் செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.25, 11.45 மதியம்12.15, 1.00, 1.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் மற்றும் திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.25 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம்-எழும்பூர் இடையே விரைவு ரயில்கள் இயக்கப்படும் பாதையிலும், எழும்பூர்-கடற்கரை இடையே மூன்றாவது ரயில் பாதையிலும் இயக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x