Last Updated : 26 Mar, 2015 08:35 AM

 

Published : 26 Mar 2015 08:35 AM
Last Updated : 26 Mar 2015 08:35 AM

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: வீட்டுக்கே சென்று நாளை வழங்குகிறார் பிரணாப் முகர்ஜி

முன்னாள் பிரதமரும் பாஜகவின் நிறுவனர்களில் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய்(90) நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருதை நாளை பெற்றுக்கொள்கிறார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவரது வீட்டுக்கே சென்று விருதை வழங்க உள்ளார்.

வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

வாஜ்பாய் உடல்நலம் குன்றி இருப்பதால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மரபுகளை மீறி அவரது வீட்டுக்கே சென்று இந்த விருதை வழங்கி கவுரவிக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த 1998 முதல் 2004-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி வகித்துள்ள வாஜ்பாய், 5 ஆண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பாஜகவின் மிதவாத தலைவராக விளங்கிய இவர், உடல்நலக் குறைவு காரணமாக பொது வாழ்க்கையிலிருந்து விலகி உள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகை யில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மறைந்த மதன் மோகன் மாளவியாவுக்கான ‘பாரத ரத்னா’ விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பாரத ரத்னா’ விருது அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட 43 பேருக்கு வழங்கப்பட் டுள்ளது.

கலை, இலக்கியம், அறிவியல், பொதுச்சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகள் செய்த தைப் பாராட்டி இந்த விருது வழங்கப் படுகிறது. தமிழக முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர், அறிவியல் விஞ்ஞானி சி.வி. ராமன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், உள்ளிட்டவர்கள் பாரத ரத்னா விருது பெற்றவர்களில் குறிப்பிடத்த் கவர்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x