Published : 07 Mar 2015 10:00 AM
Last Updated : 07 Mar 2015 10:00 AM

கல்லீரல் புற்றுநோய் ஆபத்து 70% குறைந்துள்ளது: நோபல் பரிசு பெற்ற ஹெரால்டு ஸுர் ஹாசென் பேச்சு

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் மரபணு பொறியியல் துறை சார்பில் இந்திய மரபணுவியல் கருத்தரங்க மாநாடு நடைபெற்றது. இந்த 3 நாள் மாநாட்டில் நாடு முழுவது மிருந்து 800 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் ஜெர்மன் புற்று நோய் ஆராய்ச்சி மையத்தில் தற்போது பணியாற்றிக் கொண்டிருப்பவரும், 2008-ம் ஆண்டில் மருத்துவத் துறை நோபல் பரிசு பெற்றவருமான பேராசிரியர் ஹெரால்டு ஸுர் ஹாசென் கலந்துகொண்டு, புற்றுநோய் தடுப்பு மற்றும் நோய்த் தொற்றுகளைத் தடுத்தல் குறித்து விரிவு ரையாற்றினார். அவர் பேசும்போது, “முன் மகப் பேறு தடுப்பூசியிடப்பட்ட குழந்தைகளுக்கு கல்லீரல் புற்றுநோய்க்கான ஆபத்து 70 சதவீதம் குறைத்துள்ளது. அதேபோல பின் தடுப்பூசியால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 70 முதல் 80 சதவீதம் வரை குறைகிறது” என்று கூறினார்.

சிஆர்ஆர்ஐ இயக்குநர் திரிலோச்சன் மொஹப்பத்ரா வாழ்நாள் சாதனையாளர் விருதையும், மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்வரூப் பார்தியா மற்றும் அமித் மித்ரா ஆகியோர் இளம் மரபியல் ஆராய்ச்சியாளர் விருதுகளையும் பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x