

மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 2-ம் தேதி சென்னையிலுள்ள இறைச்சிக் கூடங்கள் மூடப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசு ஆணையின்படி, சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சிக்கூடங்களும் ஏப்ரல் 2-ம் தேதி மூடப்படுகின்றன. இறைச்சி விற்பவர்கள் தங்கள் கடைகளை அரசு ஆணையின்படி, கண்டிப்பாக மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், வணிக வளாகங்கள் (ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட்கள்) மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்திய இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.