

நாகை மாவட்டத்தில் 6 மாணவ, மாணவிகளை எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்காத விவகாரத்தில் தொடர்புடைய பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் நேற்று முன்தி னம் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வுகள் மார்ச் 19-ம் தேதி தொடங்கின. இதில் நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள கீழப் பெரும்பள்ளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மாணவிகள் 5 பேரும், மாணவர் ஒருவரும் மார்ச் 19-ம் தேதி தேர்வு எழுத பள்ளிக்கு வந்துள்ளனர். ஆனால், இந்த 6 பேருக்கும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லையாம். இதனால் 6 பேரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு தொடங்கும் வரை பள்ளி வளாகத்தில் காத்திருந்துவிட்டு, தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பெற்றோர் வந்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, 6 பேருக்கும் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து தேர்வுக்கூட அனுமதி சீட்டு வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாணவ, மாணவிகள் 6 பேரும் நீண்ட விடுப்பு எடுத்த தாகவும், தேர்வுக்கு விண்ணப் பிக்கும் நேரத்தில்கூட பள்ளிக்கு வரவில்லை என்றும் மேலும் செய்முறைத் தேர்வுகளிலும் பங்கேற்கவில்லை என்றும் காரணங்கள் தெரிவிக்கப்பட்டன.
அரசுப் பொதுத்தேர்வு எழுத மாணவ, மாணவிகள் அனுமதிக் கப்படாதது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர் பாக அவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், முதல்கட்டமாக கீழப்பெரும்பள்ளம் அரசு மேல் நிலைப்பள்ளியின் தலைமை யாசிரியர் பட்டு ஷீலா அற்புதராணி, ஆசிரியர்கள் கா.ஆனந்த், எஸ்.பரமநாதன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடை பெற்று வருவதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல் தேர்வு எழுத அனுமதிக் கப்படாத மாணவ, மாணவிகள் 6 பேரையும் தொடர்ந்து அடுத் தடுத்து நடைபெறவுள்ள தேர்வு களை எழுத அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.